சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார். தயாரிப்பாளராக வனிதா இயக்கி நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தினை வனிதா புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ராபர்ட் ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. படம் வெளியாக நாட்கள் நெருங்கியுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் […]