Tag: Mumbai Rain Update

Mumbai Rain Update:மும்பையில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு;பால்கர் பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மும்பையில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் மும்பைவாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தேரி, கோரேகான், சாண்டாகுரூஸ், போவாய், கர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையம் மகாராஷ்டிராவின் பால்கருக்கு செப்டம்பர் 16 ஆம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனமழையால் தானே மாவட்டத்தில் போக்குவரத்து கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், ராய்காட் மற்றும் ரத்னகிரி ஆகிய பகுதிகளும் இன்று வரை உஷார்படுத்தப்பட்டுள்ளன.

Mumbai Rain Update 2 Min Read
Default Image