மும்பை : கடந்த 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் மீதான தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது. மும்பையின் மேற்கு ரயில்வே வலையமைப்பை உலுக்கிய பயங்கரவாத தாக்குதலுக்கு 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஜூலை 11 அன்று மும்பையின் மேற்கு ரயில்வே புறநகர் ரயில் பாதையில் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன, இதில் 189 பேர் உயிரிழந்தனர் மற்றும் 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில், […]