முரசொலி செல்வம் மறைவு., அரசியல் தலைவர்கள் இரங்கல்...மறைந்த முரசொலி செல்வம் உடல் ஊர்வலமாக தற்போது பெசன்ட் நகர் மின் மயானம் நோக்கி கொண்டு செல்லப்படுகிறது. முன்னதாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் அவரது உடலுக்கு ,மரியாதை செலுத்தினர்.
"தூணை இழந்து நிற்கிறேன்" எழுத்தாளர் செல்வம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன் என எழுத்தாளர் செல்வம் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.