இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் அமெரிக்காவின் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மேற்கு ஆசியாவில் நுழைந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி, யுஎஸ் சென்ட்ரல் கமாண்ட் ஆனது எக்ஸ் பக்கத்தில், “நவம்பர் 5ம் தேதி ஒரு ஓஹியோ-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க மத்திய கட்டளைப் பகுதிக்கு வந்தது.” என்று தெரிவித்துள்ளது. அந்த பதிவில் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. அதில் கெய்ரோவின் வடகிழக்கு அல் சலாம் பாலத்தின் கீழ், சூயஸ் கால்வாயில் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் செல்வது தெரிகிறது. அமெரிக்க […]