தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு நடுவே திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்து முடிந்த நிலையில், இன்று கும்பாபிஷேகம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. விழாவிற்காக 8,000 சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, அதிகாலை 4 மணிக்கு […]