கொரோனாவுக்கு எதிரான போரில் உதவ ஆக்ஸிமீட்டருடன் மக்களின் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க கட்சித் தன்னார்வாளர்கள் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ மூலம் செய்தி வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தன்னார்வாளர்கள் மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் ஒவ்வொரு திசையிலும் வேகமாக பரவுகிறது. பஞ்சாபிலும், கொரோனா அதிகம் பரவியுள்ளது. இப்போது எல்லோரும் ஒன்றாக வந்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆம் ஆத்மி மக்களுடன் கைகோர்க்கவும், […]