கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக கூகுள் நிறுவனத்துக்கு 314.6 மில்லியன் டாலர் (சுமார் 2,620 கோடி ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கு, கலிபோர்னியாவைச் சேர்ந்த சுமார் 14 மில்லியன் ஆண்ட்ராய்டு பயனர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, கூகுள் அவர்களின் அனுமதியின்றி, ஃபோன்கள் பயன்பாட்டில் இல்லாதபோதும் தகவல்களை சேகரித்து, விளம்பரங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியது. வழக்கில், ஆண்ட்ராய்டு ஃபோன்கள் செயலற்ற […]