சென்னை விமான நிலையம் முதல் கத்திபாரா வழியாகவும், கத்திபாரா முதல் சின்னமலை வழியாகவும் உள்ள அண்ணா சாலை ,சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, ஈசிஆர் போன்ற சாலைகளில் கனரக சரக்கு வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அக்டோபர் 11 (இன்று ) மற்றும் 12 வெள்ளி, சனி காலை 6 மணி முதல் 11 மணி வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக அக்டோபர் 11 […]
சீன பிரதமர் ஜின்பங்க் நாளை மறுநாள் சென்னை வரவுள்ளார். அடுத்த நாள் பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். பின்னர் அங்கு நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை இருவரும் பார்வையிட உள்ளனர். இந்த சந்திப்பின் போது, எந்தவித ஆவணங்களும் கையெழுத்தாக போவதில்லை எனவும், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னர்தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. தற்போது மாமல்லபுரம் பகுதியில் ஈச்சம்பாக்கம் […]
நாளை மறுநாள் சீன பிரதமர் சென்னைக்கு வருகிறார், பின்னர் இந்திய பிரதமர் மோடி- சீன பிரதமர் ஜின்பிங்க் சந்திப்பு மறுநாள் சென்னையை அடுத்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் நடைபெற உள்ளது. அங்கு நடைபெற உள்ள பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் இரு நாட்டு பிரதமர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதனால் மாமல்லபுரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள் என அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மாமல்லபுரம் […]
சீன பிரதமர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. அயல்நாட்டு தலைவர்கள் சந்திப்பு இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது. ஆனால் இந்த முறை தென்மாநிலத்தில் சென்னையில் நடைபெற உள்ளது. வரும் வெள்ளியன்று பிற்பகல் சீன பிரதமர் ஜீன்பங்க் சென்னை வருகிறார். அதன் பின்னர், மறுநாள் சனிக்கிழமை இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன பிரதமர் ஜீன்பங்க் ஆகியோர் சந்திப்பு நிகழ்கிறது. இந்த சந்திப்பு மகாபலிபுரம் […]
இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள்.அந்த கடிதத்தில் சிறுபான்மையினர்,தலித்துகள்,இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள்.ஆனால் இவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.வழக்கறிஞர் சுதிர் குமார் அளித்த புகாரின் பேரில் பீகார் காவல்த்துறையினர் இந்த […]
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இந்தியா வந்தடைந்தார் பிரதமர் மோடி. இவருக்கு நேற்று டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை ஐஐடி கல்லூரியில் நடைபெறும் 56 ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டம் அளிக்க பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து கிண்டிக்கு காலை […]
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார். நியூ யார்க்கில் உள்ள ஐநா சபையில் பல்வேறு நாட்டு தலைவர்கள் மத்தியில் தனது ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்கள், குறித்தும் வருங்கால திட்டங்கள் குறித்தும் உரை நிகழ்த்தினார். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி நேற்று இந்தியா திரும்பினார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது எனவும், […]
பிரதமர் நரேந்திர மோடி, சென்ற செப்டம்பர் 17ஆம் தேதி தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்தவகையில் கோயம்பத்தூரில் தமிழக பாஜக கட்சியின் மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் தனியார் கல்லூரியில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேள்ராஜா மற்றும் நடிகர் தனஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கஸ்தூரி ராஜா, நான் ஹிந்து மதத்தை சேர்ந்தவன். […]
காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் அக்டோபர் 2-ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஐநா சபை அவரை கௌரவிக்கும் வகையில் புதிய தபால் தலை ஒன்றை வெளியிட்டு, ஐநா சபையில் ஒரு புதிய பூங்காவையும் உருவாக்கியுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். அங்கு மகாத்மா காந்தி உருவப்படம் பொறித்த சிறப்பு தபால்தலை […]
அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி 7 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் ஹௌடி மோடி எனும் நிகழ்ச்சி இந்தியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கோலாகலமாக நடைபெற்றது. பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் முன்னிலையில் மோடி உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் குஜராத் பாரம்பரிய நடனமான தாண்டியா நடனம் மூலம் பிரமாண்ட வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது. […]
பிரதமர் மோடி 7 நாள் அரசியல் முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு, அமெரிக்கவில் இருக்கும் இந்தியர்கள் மத்தியில் ஹவ்டி மோடி எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேச உள்ளார். இந்நிகழ்ச்சி, அமெரிக்கா டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் அமெரிக்க செல்வதற்காக மோடி சென்ற விமானம் இடையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜெர்மனி நாட்டில் தரையிறக்கப்பட்டது. அங்கு ப்ராங்பர்ட் விமானநிலையத்தில் தரையிறங்கியது. அங்கு […]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை புள்ளிகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. பல நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்குவதற்கு இந்த வரி குறைப்பு வழிவகை செய்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கான கருத்துக்களை […]
மஹாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி நாசிக் பகுதியில் பாஜக சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘ ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு சட்டத்தை நீக்கியது பாஜகவின் குறிக்கோள் அல்ல. அது மக்களின் விருப்பம். அங்குள்ள மக்களும் மற்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் போல இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பற்றி சிலர் அதிகப்ரசங்கி தனமாக […]
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்த பானர்ஜி நேற்று பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டில் இந்த சந்திப்பு நேற்று நடைபெற்றது. தேர்தல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த மோடியும், மம்தாவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இருவருக்குள் நடக்கும் முதல் சந்திப்பு என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டது. இந்த சந்திப்பின் போது, மேற்கு வங்காளத்தின் பெயரை பங்களா என மாற்றக்கோரியும், மேற்கு வங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் […]
பாலிவுட்டில் ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய திரைப்படங்களை எடுத்து சர்ச்சைக்கு பெயர் பெற்ற இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார். இந்தப்படம் பிரதமர் மோடியின் இளமைக்கால வாழ்க்கை நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம். இந்தப் படம் தமிழிலும் தயாராகிவருகிறது. இப்படத்திற்கு தமிழில் கர்மயோகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரதமர் மோடியின் இளமைக் கால முக்கிய நிகழ்வுகள் படமாக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது. […]
டிப்ஸ் கேட்ட மாணவர் ஒருவருக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் அதன் முக்கிய பணியான நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த அறிய நிகழ்வை காண பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்றார்.பிரதமருடன் நேரில் இந்த காட்சியை காண மாணவர்களுக்கு ஆன்லைன் விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சந்திராயன் […]
நீண்ட விவாதத்திற்கு பிறகு நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியது முத்தலாக் தடுப்பு மசோதா. முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகியது. இந்த நிலையில் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. இஸ்லாமிய பெண்களின் வளர்ச்சிக்கும், கண்ணியத்திற்கும் முத்தலாக் தடை சட்டம் உதவும். முத்தலாக்கினால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்களின் வலிமைக்கு தலை வணங்குகிறேன் .முத்தலாக் தடை […]
பிரதமர் மோடிக்கு சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், நடிகை ரேவதி என 49 பேர், ‘ ஜெய் ஸ்ரீ ராம் எனும் கோஷங்களோடு சிறுபான்மையினர் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு குற்ற செயல்களின் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கடிதம் அனுப்பினர். தற்போது அதற்க்கு எதிராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், எழுத்தாளர் பிரசூன் ஜோஷி, எம்பி சோனால் மான்சிங் போன்ற 61 பேர், ‘ […]
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் தமிழக முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி. இன்று டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது.இதில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.இதனையடுத்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி சென்றார்.இவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உடன் சென்றனர். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் தமிழக முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி.டெல்லியில் பிரதமர் இல்லத்தில் சந்தித்தார் முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி.
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது. இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது சில வட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தமிழகத்தில் 3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டு […]