பிரதமர் மோடியுடன், இணையமைச்சர் எல் முருகன் சந்திப்பு!

With L Murugan elected as a member of the Rajya Sabha, he met and greeted Prime Minister Modi.

ராஜ்யசபா உறுப்பினராக எல் முருகன் தேர்வான நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வானதை அடுத்து, சென்ற 1ம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். எல்.முருகனுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வான நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது பிரதமருக்கு எல் முருகன் பொன்னாடை போர்த்தி, திருக்குறள் புத்தகத்தை வழங்கினார்.