குஜராத்துக்கு மட்டும் சாதகமாக செயல்படுகிறார் பிரதமர் மோடி – கேஎஸ் அழகிரி குற்றசாட்டு!

Tamil Nadu Congress Committee Chairman KS Alagiri has accused Prime Minister Narendra Modi of giving priority only to Gujarat.

குஜராத்துக்கு மட்டும் முன்னுரிமை காட்டுகிறார் என பிரதமர் மோடி மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி குற்றசாட்டு.

குஜராத் மாநிலத்துக்கு மட்டும் பிரதமர் மோடி சாதகமாக செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பதாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நிதி ஒதுக்குவதில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை வரை பாஜக ஆளும் மாநிலத்திற்கு மட்டும் பிரதமர் அள்ளி கொடுக்கிறார் என குற்றசாட்டியுள்ளார்.

குஜராத்துக்கு மட்டும் பிரதமர் போல் மோடி செயல்படுவது பதவி பிரமாணத்தின் போது அவர் ஏற்ற உறுதிமொழியை மீறும் செயலாகும் என்றும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலை செய்யும் மோடி அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.