சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. சென்னையை போலவே, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் […]