திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) கடந்த ஜூலை 21ம் தேதி அன்று திருவனந்தபுரத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவையொட்டி, கேரளாவில் பல இடங்களில் இரங்கல் கூட்டங்கள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள ஏகேஜி சென்டர் மற்றும் தர்பார் ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட […]