புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். ஆர்.வி. ஜானகிராமனுக்கு வயது 78 ஆகும்.உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இவர் தி.மு.க-வை சேர்ந்தவர் ஆவார். கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை புதுச்சேரி முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.ஆர்.வி.ஜானகிராமன் நெல்லித்தோப்பு தொகுதியில் 5 முறை போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்.