புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று மாலை 5.15 மணிக்குப் புறப்பட்டபோது ரத்து செய்யப்பட்டது. ஓடுபாதையில் செல்லும்போது கோளாறு கண்டறியப்பட்டதால், பயணிகள் பாதுகாப்பு கருதி விமானம் நிறுத்தப்பட்டது. பின்னர், பயணிகள் இறக்கிவிடப்பட்டனர், இதையடுத்து விமானம் விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் உட்பட 70 பயணிகள் இருந்தனர். பயணிகளில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் […]