டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த கனமழை, வெள்ளத்திற்கு இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர். அதில், 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர். பலரும் தங்களது உடைமைகளை இழந்து சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். சான் அன்டோனியோ அருகே உள்ள கெர்கவுண்டியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. […]