திருச்சியில் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 10-ம் வகுப்பு மாணவி. திருச்சி மாவட்டம், மணப்பாறை சின்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் உதயதர்ஷினி. இவர் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஏற்கனவே தேர்வுகள் நடைபெறும் என்று , அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான ஹால் டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வாங்கி விட்டு வீடு வந்த உதய தர்சினி, மனமுடைந்த நிலையில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளார். […]