12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 10 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரை நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 27 -ம் தேதி முதல் நேற்றுவரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதையடுத்து, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 10 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. […]