சென்னை : இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் கொண்ட அட்டவணையை அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். அதில், 11ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15, 2025இல் தொடங்கி, பிப்ரவரி 21, 2025இல் முடிவடையும் என்றும், எழுத்துத் தேர்வுகள் மார்ச் 5, 2025இல் தொடங்கி மார்ச் 27, 2025இல் முடிவடையும் என்றும் இதற்கான தேர்வு முடிவுகள் 19.05.2025இல் வெளியிடப்படும். என்றும் அமைச்சர் […]
சென்னை : இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் கொண்ட அட்டவணையை அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். அதில், 12ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7, 2025இல் தொடங்கி, பிப்ரவரி 14, 2025இல் முடிவடையும் என்றும், எழுத்துத் தேர்வுகள் மார்ச் 3, 2025இல் தொடங்கி மார்ச் 25, 2025இல் முடிவடையும் என்றும் இதற்கான தேர்வு முடிவுகள் 09.05.2025இல் வெளியிடப்படும். என்றும் அமைச்சர் […]
சென்னை : இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அதில், 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையின் படி, செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 22, 2025-ல் தொடங்கி, பிப்ரவரி 28, 2025-ல் முடிவடையும் என்றும், எழுத்து தேர்வுகள் மார்ச் 28, 2025இல் தொடங்கி ஏப்ரல் 15, 2025இல் முடிவடையும். இதற்கான தேர்வு முடிவுகள் 19.05.2025இல் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார். 10ஆம் […]
சென்னை : தமிழகத்தில் 10,11,12ஆகிய வகுப்பு பள்ளிமாணவர்களுக்கு 2024-2025 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அட்டவணை விவரங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டார். அவர் வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, ” 12ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7, 2025-ல் தொடங்கி, பிப்ரவரி 14, 2025-ல் முடிவடையும். 12ஆம் வகுப்புக்கான எழுத்து தேர்வுகள் மார்ச் 3, 2025இல் தொடங்கி மார்ச் […]
சென்னை : நேற்று (அக்டோபர் 11) இரவு 8.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து கவரப்பேட்டை செல்லும் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த மைசூர் (கர்நாடகா) – தர்பங்கா (பீகார்) செல்லும் பாக்மதி விரைவு ரயில், சரக்கு ரயில் மீது விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை. சரக்கு ரயில் முழுவதும் காலியாக இருந்ததால் விபத்தின் அதிர்வு மொத்தத்தையும் சரக்கு ரயில் பெட்டி உள்வாங்கி கொண்டு ரயில்வே தண்டவாளம் குறுக்கே விழுந்துவிட்டது. இல்லையேல் பெருமளவு […]
திருச்சி : நேற்று மாலை 5.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து 144 பயணிகள் ஒரு தலைமை விமானி , ஒரு துணை விமானி, 4 விமான பணியாளர்கள் உடன் ஷார்ஜா நோக்கி புறப்பட்ட விமானம் , வானில் பறக்க துவங்குகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாமல் நீட்டிக் கொண்டிருந்தன. இதனை அறிந்த விமானத்தின் தலைமை விமானி இக்ரோம் ரிஃபாட்லி ஃபாமி ஜைனல், உடனடியாக தகவலை திருச்சி விமான நிலையத்திற்கும், […]
சென்னை : நேற்று இரவு சென்னையில் இருந்து சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி – கவரப்பேட்டைக்கு இடையே உள்ள ரயில் பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது , மைசூரில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 2 ரயில் பெட்டிகள் தீப்பற்றின. 6 ரயில்பெட்டிகள் தடம்புரண்டன. இந்த ரயில் விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்தில் காயங்கள் ஏற்பட்டவர்கள் சென்னை ஸ்டான்லி […]
தூத்துக்குடி : புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலில் மூலவரான பெருமாள், வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்றபடி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும், அதிலும், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் வைணவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இம்மாதம் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு […]
தூத்துக்குடி : தசராவிற்கு உலக புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் மாலை அணிந்துகொண்டு பக்தர்கள் அம்மன், முருகன், விநாயகர், குரங்கு, கரடி போன்ற வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி, 10 நாட்கள் நடைபெற்ற தசரா திருவிழாவில் பக்தர்கள் விரதம் இருந்து, வேடமணிந்து காணிக்கை எடுத்து வந்தனர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான […]
தூத்துக்குடி : இன்று நாடு முழுவதும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமி நாளன்று கல்வி, புதிய தொழில்கள் என நல்லவற்றை துவங்கினால் அத்துறையில் வெற்றிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாக உள்ளது. இந்நிலையில் இன்று விஜயதசமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான எஸ்.ஏ.வி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பழமையான கலைமகள் (சரஸ்வதி) ஆலயத்தில் குழந்தைகள் கல்வியை துவங்கும் ‘வித்யா (அறிவு) ஆரம்பம்’ எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த […]
சென்னை : தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழையும், ஒரு சிலப் பகுதியில் கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தில் பருவ மழை பெய்யத் தொடங்கினாலே சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மழை நீர் பாதிப்பென்பது தொடரும் கதையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆட்சியைப் போல இந்த முறை அது போன்ற பாதிப்புகள் ஏற்படாது எனவும், அதற்கான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், நேற்று நடைபெற்ற ரயில் விபத்துக்கு எடுத்த […]
திருச்சி : 144 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் நேற்று (அக்டோபர் 11) ஏர் இந்தியா விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஹைடிராலிக் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அதன் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்படாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக, ஷார்ஜா விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்படவே, திருச்சியை அந்த விமானம் சுற்றும் நிலை ஏற்பட்டது. விமானத்தை அப்படியே தரையிறக்கினால் தீப்பற்றும் […]
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் நேற்றிரவு மோதி விபத்துக்குள்ளானது. அதாவது, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரில் இருந்து தர்பங்கா சென்ற விரைவு ரயில் மோதியதில் 7 பெட்டிகள் கவிழ்ந்தன, மேலும் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து நாசகமாகியது. விபத்துக்கு நாசவேலை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்பொழுது, விபத்தில் உருக்குலைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன […]
சென்னை : நேற்று காலை கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பீகார் தர்பங்கா நோக்கி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் நேற்று இரவு 8.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி – கவரப்பேட்டைக்கு இடையே அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது அங்கு தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி 6 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 2 ரயில் பெட்டிகள் தீப்பிடித்தன. உடனடியாக சுதாரித்துக்கொண்ட பயணிகள் ரயிலில் இருந்து வெளியே […]
திருச்சி : இன்று மாலை 5.40 மணியளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் 140 பயணிகளுடன் சார்ஜா புறப்பட்டது. விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உள்ளே இழுக்க முடியாமல் இருந்துள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறுடன் தரையிறங்குவதற்கு ஷார்ஜா விமான நிலையம் மறுத்துவிட்டது. அதன் பிறகு திருச்சி விமான நிலையம், விமானம் பத்திரமாக தரையிறங்க அனுமதி கொடுத்தது. ஆனால், உடனடியாக தரையிறங்கினால் தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதால் எரிபொருள் காலியாகும் வரை வானில் […]
தூத்துக்குடி : தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தவெக கட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த ஏராளமான பெண்கள் இணையும் நிகழ்ச்சி தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெருவில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நேற்று (அக்டோபர் 10) நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அஜிதா ஆக்னல் தலைமையில் தூத்துக்குடி மாநகர், திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று தங்களை தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைத்துக் […]
சென்னை : திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியின் தலைமை நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி அவர்களின் கணவருமான முரசொலி செல்வம் நேற்று உயிரிழந்தார். இவர் சமீபத்தில் லேசாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக முரசொலி செல்வம் காலமானார். மறைந்த முரசொலி செல்வம் அவர்களின் இறுதி சடங்கு இன்னும் சற்று நேரத்தில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி தின வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். ஆனால் இதற்கு முன்னதாக இந்து பண்டிகையாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் விஜயின் வாழ்த்து செய்தி அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்தியா முழுக்க விநாயகர் சதுர்த்தி தினவிழா கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் பலரும் […]
சென்னை : லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (10-10-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரேபிக் கடல், கர்நாடகா – கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய […]
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மருமகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் காலமானார். அவருக்கு வயது (82). திமுகவின் நாளேடான முரசொலியின் நிர்வாக ஆசிரியராக முரசொலி செல்வம் 55 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். முரசொலியில் சிலந்தி எனும் பகுதியை எழுதி வந்த இவர் முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண் அயர்ந்த நேரத்தில் ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்தார். இவருடைய இறப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரங்கல் செய்தியையும் வெளியீட்டு […]