சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. சென்னையை போலவே, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் […]
சென்னை: சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய துறைகள் வழக்கம்போல் இயங்கும். மேலும், தனியார் நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கவும், வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, மேலே குறிப்பிடப்பட்ட அந்த நான்கு மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு […]
சென்னை : கடந்த சில நாட்களாகவே சென்னை உட்பட பல மாவட்டங்களில கனமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும், தற்போது வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 15) தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் அடுத்த 48 மணி நேரம் எப்படி இருக்கும் என்பதற்கான நிலவரத்தை வானிலை ஆய்வு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என […]
சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியது குறித்தும், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை குறித்தும் வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தற்போது குறிப்பிட்டுளளார். அவர் கூறுகையில், ” கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலைப்பகுதியில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்றுடன் தென்மேற்கு பருவமழை நிறைவு பெற்று, வடகிழக்கு […]
சென்னை : தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடங்கியுள்ளது எனவும், இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்நிலையில், வானிலை தொடர்பான தகவல் குறித்த அறிவிப்பை பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக, மீனவர்களுக்கான எச்சரிக்கை குறித்த தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,… தமிழக […]
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தீவிரமடையத் தொடங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடமாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் பணியை தீவிரப்படுத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மழை காலத்தில் நாம், பாதுக்காப்பாக நம்மை சுற்றி எப்படி கையாள வேண்டும் மற்றும் இந்த சமயத்தில் நாம் எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை பற்றி கீழே பார்க்கலாம். மழை காலத்தில் செய்ய கூடாதவை : அரசாங்கம் […]
சென்னை : மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் நீர் தேங்கி குளம் போலக் காட்சியளிக்கிறது. எனவே, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் இது சம்பந்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் மக்களாகிய நாம் சில இடங்களில் பார்த்துப் பாதுகாப்பாகச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், மழைக்காலம் தொடங்கிவிட்டது […]
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால் இன்று காலை முதலே சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் மழைநீர் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள், மீட்பு […]
சென்னை : சென்னையில் பல பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை உடனே நிற்க வாய்ப்பில்லை என்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மேகங்கள் சிறிதளவு கூட பலவீனமடைவதாகத் தெரியவில்லை. அவை மேலும் மேலும் ஒன்றிணைந்து அசைவின்றி நிற்கின்றன. இது யாரையும் பதற்றப்படுத்துவதற்காக அல்ல. மழையில் இடைவெளி இருக்காது போல் தெரிகிறது. அதிக மழை பெய்ய உள்ளதால் […]
சென்னை : பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில், மழைநீரை உடனடியாக அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், பாமக நிறுவனம் ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ளது. 6 செ.மீ மழைக்கே […]
சென்னை : வடகிழக்கு பருவமழை தற்போது தமிழ்நாட்டில் தொடங்கி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது வலுப்பெற்று வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படியான வானிலை அப்டேட்களை மத்திய, மாநில அரசாங்கத்தின் வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பது போல சில தனியார் வானிலை […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 16.10.2024) புதன் கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர் கீரநத்தம், […]
சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, மெரினா, கிண்டி, தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தபோதும், அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கனமழை எதிரொலியாக சென்னை வேளச்சேரி மேம்பாலங்களில் 2வது நாளாக கார்கள் அணிவகுத்து நிற்கின்றனர். வேளச்சேரி […]
சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் கனமழை முன்னெச்செரிக்கை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு மழை பாதிப்பு குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை பணிகளை தமிழக துணை முதலமைச்சார் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். அதன் பிறகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக […]
சென்னை : வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம் , தெற்கு ஆந்திரா நோக்கி வரவுள்ளதால் நாளை, நாளை மறுநாள் பல்வேறு பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதலே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தீவிரமடைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 520கிமீ தூரத்தில் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நெருங்கி வருவதால் வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதி என பல்வேறு இடங்களில் கனமழை கொட்டிதீர்க்கும் என […]
சென்னை: தமிழநாட்டில் பருவமழை என்பது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட வாரியாக பல முன்னேற்பாடுகள் எடுத்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக பாதிப்படையும் இடங்களில் இந்த முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். மேற்கொண்டு பாதிப்புகள் ஏதேனும் ஏற்படுமாயின் அதற்கு தொடர்பு கொள்வதற்கு புகார் எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், சென்னை உட்பட பல மாவட்டங்களில் உள்ள மக்கள் […]
சென்னை : வடகிழக்கு பருவமழை இந்த முறை மிகத் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், கனமழை எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பங்கேற்னர். இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், “ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியுங்கள். ஆதரவற்றோர் […]
புதுச்சேரி: நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான சென்னை, புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் பல மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 60 மீட்புப்படை குழுவினர், மீட்பு உபகரணங்களுடன் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக, […]
சென்னை : தமிழநாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 4 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வங்கக்கடலில் உருவானது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட வாரியாகவும் மற்றும் மாநகராட்சி சார்பிலும் பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்: ஆட்சியர் அலுவலகம் உதவி எண்: 044-27237107 வாட்ஸ்அப் : 8056221077 செங்கல்பட்டு மாவட்டம்: பேரிடர் கட்டுப்பாட்டு மையம் உதவி […]