புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

புதுச்சேரியில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Puducherry School Leave

புதுச்சேரி:நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான சென்னை, புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் பல மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 60 மீட்புப்படை குழுவினர், மீட்பு உபகரணங்களுடன் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு சென்றுள்ளனர்.

ஏற்கனவே, தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 15) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.