தமிழ்நாடு

ஓய்வு எடுத்த கனமழை: சென்னை சென்ட்ரலில் இருந்து வழக்கம்போல் ரயில்கள் இயக்கம்.!

சென்னை:  வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கி இருந்ததால், மாற்று ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. ஆனால், நேற்றிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில், வியாசர்பாடி – பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்டது. இதனால், ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட மற்றும் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் மற்றும் சென்ட்ரலில் இருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. […]

Basin bridge 4 Min Read
SouthernRailway

“சாலையில் தண்ணீர் நிற்காமல் இருக்கே, அதான் வெள்ளை அறிக்கை.!” இபிஎஸ்-க்கு உதயநிதி பதில்.!

சென்னை : வடகிழக்கு பருவமழை , வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. இன்றும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று மழையின் அளவு வெகுவாக குறைந்தது. கனமழை பெய்தவுடன் சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புறநகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.  அவர்களுக்கு […]

#ADMK 6 Min Read
ADMK Chief Secretary Edappadi palanisamy - Tamilnadu Deputy CM Udhayanidhi stalin

கொஞ்சம் நிம்மதி! “இன்றிலிருந்து வழக்கமான பருவமழை பெய்யும்” – பிரதீப் ஜான்.!

சென்னை : வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. முன்னதாக 12 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது 15 கி.மீ ஆக அதிகரித்து உள்ளது. தற்பொழுது, தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்-கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இன்றைய தினம் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால், கணிப்பின்படி, கனமழை ஏதும் பெரிதும் இல்லாமல், […]

#ChennaiRains 5 Min Read
private meteorologist Pradeep John

சென்னைக்கு அருகில்..15 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. முன்னதாக 12 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது 15 கி.மீ ஆக அதிகரித்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி- நெல்லூர் இடையே நாளை (அக். 17) அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு […]

Chennai Rains 3 Min Read
NorthEastMonsoon

“குறை சொல்லறவங்க சொல்லிட்டு இருப்பாங்க, களத்துல யார்னு மக்களுக்கு தெரியும்” – மேயர் பிரியா.!

சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாகவும், சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று பெய்த இடைவிடாத மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஒத்திகை சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் […]

Chennai Corporation 4 Min Read
Mayor Priya

அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : சென்னையில் பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெய்த கனமழையால் கணேசபுரம் மற்றும் ஸ்டான்லி சுரங்கப்பாதைகள் தவிர, மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதில் அரசு மற்றும் தன்னார்வலர்கள் முழு வீச்சில் நேற்று முதலே ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்டோர் 70 நிவாரண முகாம்களில் 2,789 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,20,174 […]

Amma Canteen 5 Min Read
Amma Unavagam mk stalin

இதுவரை 3 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்ப்பட்டுள்ளன., பேரிடர் மேலாண்மை துறை தகவல்.!

சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலை வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நேற்று முதலே பல்வேறு இடங்களில் கனமழையால் மழைநீர் தேங்கி இருந்தது. அதனை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அதே போல பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான […]

#Rain 4 Min Read
Chennai Corporation Flood relief works

காலை 10 மணி வரை..இந்த 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மேலும், இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை அதிகாலை இது நெல்லூர் அருகே கரையைக் கடக்கும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் இன்று […]

#Rain 3 Min Read
Chennai Rain Update

சாதாரண மழையாக தான் இருக்கும்.. சமாளிச்சிடலாம் ! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் தீவிரமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும், கடந்த 7 மணி நேரமாக இது சென்னை, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், இது நாளை அதிகாலை (17-10-2024) புதுச்சேரி-நெல்லூருக்கு இடையில் கரையை கடக்கும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. […]

Chennai Rains 5 Min Read
Weatherman Pradeep

10.கீ.மி வேகத்தில்… சென்னையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இதனால், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கு திசையில் 440கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும், கடந்த 7 மணி நேரமாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல புதுச்சேரியில் இருந்து 460 கி.மீ, நெல்லூரில் இருந்து 530 கி.மீ கிழக்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது என இந்திய […]

Chennai Rains 4 Min Read
Low pressure zone

புரட்டி போடும் கனமழை! எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

சென்னை : வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று இரவு வலுப்பெற்றதென வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இதன் விளைவாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. கனமழையின் தீவிரத்தால் இன்று புதுச்சேரி, சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். அதில், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் […]

#Chennai 4 Min Read
School Leave For Rain

அக்.17-ம் தேதி கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்.. சென்னையை நோக்கி நகரும் மேக கூட்டங்கள்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (14-10-2024) காலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (15-10-2024) காலை 5.30 மணி அளவில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுது. இது, நாளை காலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிடும் என கூறுகின்றனர் வானிலை ஆய்வாளர்கள். பின்னர், அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே […]

Chennai Rains 4 Min Read
chennnai - Low pressure zone

சாம்சங் தொழிலாளர்களின் ‘நீண்ட நாள்’ வேலை நிறுத்தம் வாபஸ்.! வெளியான முக்கிய அறிவிப்பு.!

சென்னை : ஊதிய உயர்வு , பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் பிறகு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பெயரில் அமைச்சர்கள், போராட்டம் நடத்தும் ஊழியர்கள் , சாம்சங் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஒரு தரப்பினர் சாம்சங் நிர்வாகம் கூறிய சலுகைகளை ஏற்றுக்கொண்டனர். மற்றொரு தரப்பினர் சிஐடியு […]

#Chennai 8 Min Read
Samsung Workers protest withdraw

சென்னையில் பெரும் மழை: 4 விரைவு ரயில்கள் ரத்து – தென்னக ரயில்வே அறிவிப்பு.!

சென்னை : சென்னை பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று (15-10-2024) நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எந்தெந்த ரயில்கள் சென்னை சென்ட்ரலில் மாலை 4.35-க்கு புறப்பட வேண்டிய 16203 திருப்பதி விரைவு ரயில், முழுமையாக ரத்து. திருப்பதியில் மாலை 6.05-க்கு புறப்படவுள்ள 16058 சென்னை சென்ட்ரல் ரயில், முழுமையாக ரத்து. சென்னை சென்ட்ரலில் இரவு 9.15-க்கு புறப்படவுள்ள 16021 மைசூர் காவேரி ரயில், […]

Basin bridge 4 Min Read
Chennai Railway update

நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை அலர்ட்? முழு விவரம் இதோ!!

சென்னை : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாளை அக் 16 தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை, அதித கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,… ரெட் அலர்ட் […]

#Chennai 4 Min Read
weather news

சென்னை கனமழை : எந்தெந்த சுரங்கபாதைகள் மூடல்.? முக்கிய போக்குவரத்து மாற்றங்கள்.,

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடல் பகுதியில் புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று வடதமிழகம், தெற்கு ஆந்திரா நோக்கி வந்து கொண்டிருக்கிறதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளில், சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ரயில் சேவை ,  விமான சேவைகள், பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் முக்கிய […]

#Chennai 6 Min Read
Heavy rain - Chennai Traffic Changes

திண்டுக்கல்லில் கனமழை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திண்டுக்கல் : அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குதிரையாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல் வெல்ல அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கி தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் தீவிரமடைந்து வரும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல்லில் பழனி வட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அமைந்துள்ள குதிரை அணியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அங்கு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு […]

#Flood warning 3 Min Read
Dindugal - TNWRD

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி : தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவது போல புதுச்சேரியிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில்,  கனமழைக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.  இந்த சூழலில், ஏற்கனவே, கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று (15.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நாளையும் கனமழைக்கு வாய்ப்பு […]

#Puducherry 3 Min Read
puducherry school leave

பயணிகள் கவனத்திற்கு: சென்னை மாநகர பேருந்துகள் – போக்குவரத்து மாற்றம்.! முழு விவரம்…

சென்னை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதலாக மழை பெய்து வருகிறது. அதில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கிய கனமழை, இப்போது வரை நீடித்து வருகிறது. இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கான RED ALERT விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் MTC பேருந்துகள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், […]

Chennai Bus 4 Min Read
Chennai Transport

சென்னை கனமழை : அடுக்குமாடி குடியிருப்புகள் உள்வாங்கியது! குடியிருப்பு வாசிகள் அச்சம்!

சென்னை : பருவமழை காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக தற்போது, சென்னையில்  அமைந்தகரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்வாங்கி இருக்கிறது. சென்னையில் பெய்து வரும் கனமழையால் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைப்பகுதியானது  150 மீ. தூரத்திற்கு, 20 அடி பள்ளத்திற்கு உள்வாங்கி இருக்கிறது என கூறப்படுகிறது. மேலும், அந்த கட்டிடத்தைச்  சுற்றியுள்ள சுவர்களில் பெரிதளவு விரிசல்களும் ஏற்பட்டு இருக்கிறது. அந்த அடுக்குமாடி […]

#Chennai 3 Min Read
Chennai - amnjikarai