இதுவரை 3 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்ப்பட்டுள்ளன., பேரிடர் மேலாண்மை துறை தகவல்.!

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை 3,20,174 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும், 70 முகாம்களில் 2,789 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

Chennai Corporation Flood relief works

சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலை வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

நேற்று முதலே பல்வேறு இடங்களில் கனமழையால் மழைநீர் தேங்கி இருந்தது. அதனை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அதே போல பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரிடர் மேலாண்மை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பேரிடர் மேலாண்மை குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் தண்ணீர் தேங்கிய 512 இடங்களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 113 இடங்களில் சிறிய அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.

சென்னையில் மொத்தமாக 70 முகாம்களில் 2,789 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 2 நாட்களில் மட்டும் 3 லட்சத்து 20 ஆயிரத்து 174 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் கணேசபுரம் , ஸ்டான்லி சுரங்கப்பாதை தவிர மற்ற சுரங்கபாதைகளில் தண்ணீர் இல்லை. அங்கு போக்குவரத்து சீராக உள்ளது.

தமிழ்நாடு முழுக்க 1,293 மருத்துவ முகாம்கள் செயல்பட்டுள்ளன. அதில், 77,877 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
sanjay rai kolkata
BiggBossTamilSeason8
DMK Candidate VC Chadrasekar - NTK Candidate Seethalakshmi
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai