தமிழ்நாடு தொலைநோக்கு 2023 திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என்றும் சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்தார். பேரவையில் முதல் கூட்டத்தில் பேசிய ஆளுநர் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம் மூலம் நலிந்த பிரிவினருக்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக தெரிவித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் உள்ளிட்டவையும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக […]
திருவாரூரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,58,687 என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், 303 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது, அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதியுடைய வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் .திருவாரூரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,58,687 ஆகும். ஆண்கள் – 1,27,500 பேர், பெண்கள் -1,31,169 பேர், 3-ம் பாலினத்தவர் – 18 பேர் என்று […]
பொங்கல் பரிசாக தமிழக அரசு கொடுக்கும் ரூ 1000 மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், சட்டப்பேரவையில் சம்பிரதாயத்திற்காக ஆளுநர் உரை வாசிக்கப்பட்டுள்ளது . தமிழக அமைச்சர்கள் மக்களுக்காக டெல்லி செல்லவில்லை.அமைச்சர்கள் அடிக்கடி டெல்லி செல்வதன் மர்மம் என்ன…தமிழக அரசு என்னென்ன நலத்திட்டங்களை செய்தது என தெரியவில்லை.பொங்கல் பரிசாக தமிழக அரசு கொடுக்கும் ரூ 1000 மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது.அ.ம.மு.க திருவாரூர் வேட்பாளர் ஜனவரி 4-ஆம் தேதி […]
மத்திய சிறையில் புதிய தொழில் நுட்பத்தில் தொலைக்காட்சி வழங்க கோரிய வழக்கில், சிறைத்துறை தலைவருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் புதிய தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சி வழங்க கோரிய வழக்கில் ஜன.22க்குள் உரிய முடிவு எடுக்க சிறைத்துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஒட்டிய இளைஞர்களை போலீசார் அழைத்து, அவர்களின் தவறை சுட்டிக்காட்டி அவர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். குற்றங்கள் பெருக காரணம் : பல குற்றங்கள் பெருகுவதற்கு இந்த மது தான் காரணம் என்று கூறியுள்ளார், நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு குற்றமும் நீங்கலாக செய்வதில்லை 90% குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் இந்த மது தான் என்று கூறியுள்ளார். இந்த இளைஞர்களோடு காவல் துறையினர் பேசுகையில், அரசாங்கம் தானே மது கடைகளை திறக்கிறது, பின்னர் குடித்தால் […]
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் தமிழகம் உள்ளிட்ட இடங்களில் இன்றுடன் வடகிழக்கு பருவமழை முடிவடைவதாக கூறியுள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையம் 2018-ல் இயல்பாய் விட 12 சதவீதம் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என கூறியிருந்தது. இந்நிலையில் இயல்பை விட இந்த ஆண்டு 24 சதவீதம் குறைவாக தான் வடகிழக்கு பருவமழை பதிவாகியுள்ளது என கூறியுள்ளார். மேலும், சென்னையில் மேகம் வானம் மூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகத்தின் […]
ஈரோட்டில் வடமாநில பிரமுகரின் நிறுவனத்தில் இருந்து ஹவாலா பணம் 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு சத்தி சாலையில் பிரேம்நாத் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் ஹவாலா பணப்பரிவர்த்தனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 20 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், ஈரோடு மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். […]
ஹெச்.ஐ.வி இரத்தத்தை தானம் செய்த வாலிபர் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வாலிபரின் சாவில் மர்மம் உள்ளதாகவும், பிற மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. பிரேத பரிசோதனை : இதையடுத்து நெல்லை, தேனி மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனையின் ஏதாவது ஒரு மருத்துவமனையின் 2 தடவியல் நிபுணர்களை கொண்டு பரிசோதனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து தேனி மருத்துவக்கல்லூரியை சேர்ந்த தடவியல் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர்: ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) காலை 10 மணிக்கு கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது . ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை: […]
தமிழக அரசு கேட்ட கஜா புயல் முழு நிவாரண தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த ஆண்டுக்கான முதல் தொடர் என்ற போதிலும், ஆளுநர் உரையை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது, முக்கிய பிரச்சனைகளை பேச சபாநாயகர் அனுமதி […]
நேற்று புத்தாண்டை பலரும் பல விதமாக கொண்டாடினர். இதனையடுத்து கன்னியாகுமரி கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட மக்கள் கூட்டம் திரண்டது. முக்கடல் சங்கமிக்கும் கடற்கரை பகுதியான சங்கிலித்துறையில் மக்கள் கூட்டம் திரண்டது. புத்தாண்டு கொண்டாட்டம் : இரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்தவுடன் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து, கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றுள்ளனர். அதிகாலை சூரியன் அஸ்தமிக்கும் போது அனைரும் கைகூப்பி வணங்கியுள்ளனர். மேலும் சிலர் செல்பி எடுத்து புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப்பயணிகள் படகு […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக செய்தி சேகரித்த விவகாரத்தில் அமெரிக்க இளைஞரின் விசாவை ரத்து செய்து போலீசார் திருப்பி அனுப்பினர். அமெரிக்கா இளைஞரிடம் விசாரணை : அமெரிக்காவை சேர்ந்த மார்க் சியல்லா என்பவர் சுற்றுலா விசாவில் தூத்துக்குடிக்கு வந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மார்க் சியல்லாவிடம் போலீசார் விசாரணை நடத்தி, அவரிடம் இருந்த கேமரா, லேப்டாப் ஆகியவைகளை ஆய்வு செய்தனர். விசாவை ரத்து செய்து நடவடிக்கை : சுற்றுலா தளங்களை மட்டுமே […]
கடந்த ஆண்டில் கன்னியாகுமரிக்கு 20 லட்சத்து 49 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி உலக அளவில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இங்கு சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் இரண்டும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவையும் பயணிகளை கவரும் […]
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதி: திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை இருந்தது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு : பின் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் […]
14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து நெல்லையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நெல்லை மாநகராட்சி ஆணையர் நாராயண நாயர் உத்தரவின்படி 10 மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், சில கடைகளில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை […]
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) காலை 10 மணிக்கு கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.
சென்னை ஐஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதத்தில் இது 3-வது தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்டை சேர்ந்த ரஞ்சனா குமாரி என்னும் மாணவி சென்னை ஐஐடியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பெண்கள் விடுதியில் தங்கி படித்து வரும் ரஞ்சனாவின் விடுதி அறையின் கதவு பூட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற ஊழியர்கள், மாணவி தூக்கிட்டு தற்கொலை […]
சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு உதவும் கருவி என்று கூறி அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் எனப்படும் செயலி, இப்போது இளைய தலைமுறையினரை சீரழிக்கும் சக்தியாக மாறியுள்ளது. சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் .டிக்டாக் செயலியின் தீய விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் எடுத்து கூற வேண்டும் என்று பாமக நிறுவனர் […]
பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால், அது வாழ்க்கையை சீரழிக்கும் என்று அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரோட்டில் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கூறுகையில், பள்ளி மாணவர்கள் படிக்கும் வயதில் செல்போன் பயன்படுத்தினால், அது வாழ்க்கையை சீரழிக்கும் .அதேபோல் படித்து முடித்து வேலை கிடைத்த பின்னர் செல்போன், கார் போன்றவை தானாக கிடைக்கும் என்று அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் […]