மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும். மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) காலை 10 மணிக்கு கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்படும். இந்த கூட்டத்தொடரில், மேகேதாட்டு விவகாரங்கள், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில், மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்து பேசினார். லோதி சாலையில் அமைந்துள்ள மத்திய மின்னணு அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த கோரிக்கை மனு ஒன்றினை […]
தச்சன்குறிச்சியில் நாளை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, 2017 ஜனவரி அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் நாளை (ஜனவரி 2-ஆம் தேதி) ஜல்லிக்கட்டு நடைபெரும் என்று தெரிவிக்கப்பட்டது. தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் […]
திருவாரூர் இடைத்தேர்தலில் எப்படி போட்டியிட்டாலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது அவரது சொந்த கருத்து.திருவாரூர் இடைத்தேர்தலில் தனித்தோ, கூட்டணியாகவோ போட்டியிட்டாலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளர்.
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திருவாரூர் இடைத்தேர்தல் […]
சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை இருப்பதால் அதுதொடர்பாக ஆலோசனை நடத்தினோம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் அதற்கான விண்ணப்ப […]
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சென்னையில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், விபத்துகளில் 107 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் விளைச்சலில் பொள்ளாச்சி பகுதிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக கவுண்டம்பாளையம் பகுதியில் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மஞ்சள் நீண்டகால பயிர் மற்றும் எளிதில் நோய் தாக்க கூடியது என கூறும் விவசாயிகள், போதுமான அளவு தண்ணீர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்கின்றனர். முன்பெல்லாம் பல ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வந்த மஞ்சள், இதுபோன்ற காரணங்களால் சாகுபடி செய்வோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், பொங்கல் பண்டிகையின் […]
வாணியம்பாடி அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியதை அடுத்து கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியில், கடந்த 27 ஆம் தேதி, சிறுத்தை ஒன்று, அப்பகுதியை சேர்ந்த 4 பேரை தாக்கி விட்டு தப்பியோடியது. இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜாமணிவட்டம் பகுதிக்கு நள்ளிரவில் வந்த சிறுத்தை, அப்பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டியை தாக்கியது. கன்றுக்குட்டியின் சத்தை கேட்டு வந்த அப்பகுதி […]
பகுதிவாரியாக ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில், வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது .திருச்சி – ராமேஸ்வரம் பயணிகள் ரயில், வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது . செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் வரும் 3 […]
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை 3ம் தேதி மாலை 6 மணிக்குள் […]
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், ஜனவரி 27-ஆம் தேதிக்கு முன்னரே பிரதமர் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது. திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை விட நாடாளுமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்துகிறோம்.ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்றிருந்தால் சுதந்திரமான, முழுமையான சிகிச்சை […]
திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏன்? என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திராவிடர் கழக தலைவர் வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 20 இடங்கள் காலியாக இருக்கும் போது திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் […]
சென்னையை போல் திருவாரூரிலும் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஒரு காலத்தில் சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தது, இன்று நிலை என்ன?..சென்னையை போல் திருவாரூரிலும் வெற்றி பெறுவோம். ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது .இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்.அரசு தேவை என கருதினால் சிலரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார். தொகுதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் தொடங்கியது. ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, 2017 ஜனவரி அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டது. இந்நிலையில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் தொடங்கியது .ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் […]
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை 3ம் தேதி மாலை […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்ட குழுவினரை சந்தித்த அமெரிக்க இளைஞரிடம் போலீசார் 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் அமெரிக்காவை சேர்ந்த மார்க் ஷில்லா என்பவர் கடந்த சில நாட்களாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை சந்தித்து பேசியதாகவும் ஸ்டெர்லைட் குறித்து வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தூத்துக்குடி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, அந்த இளைஞர் தவறு செய்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]