திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏன்? என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திராவிடர் கழக தலைவர் வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 20 இடங்கள் காலியாக இருக்கும் போது திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் […]
சென்னையை போல் திருவாரூரிலும் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஒரு காலத்தில் சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தது, இன்று நிலை என்ன?..சென்னையை போல் திருவாரூரிலும் வெற்றி பெறுவோம். ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது .இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்.அரசு தேவை என கருதினால் சிலரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார். தொகுதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் தொடங்கியது. ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, 2017 ஜனவரி அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டது. இந்நிலையில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் தொடங்கியது .ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் […]
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை 3ம் தேதி மாலை […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்ட குழுவினரை சந்தித்த அமெரிக்க இளைஞரிடம் போலீசார் 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் அமெரிக்காவை சேர்ந்த மார்க் ஷில்லா என்பவர் கடந்த சில நாட்களாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை சந்தித்து பேசியதாகவும் ஸ்டெர்லைட் குறித்து வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தூத்துக்குடி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, அந்த இளைஞர் தவறு செய்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், கின்னஸ் சாதனை முயற்சியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 188 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்தனர். சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள டான் பாஸ்கோ மெட்ரிக்குலேசன் பள்ளியில் சோலோ நடன மாராத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 23ம் தேதி துவங்கிய இந்த சோலோ நடனம் தொடர்ந்து இரவு பகலாக இடைவேளையின்றி நடத்தபட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 188 மணி நேரம் நடனமாடி […]
திமுக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், 20 தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் . 2019 ம் ஆண்டு, தேர்தல் ஆண்டு என்றார். நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி, 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அனைவரும் சேர்ந்து முதலமைச்சரை தேர்ந்தெடுப்போம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், சட்டப்பேரவை தேர்தல் அறிவித்த பின்னர் முதல்வர் வேட்பாளர் தேர்ந்தேடுக்கப்படுவார்.வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.அப்போது தேர்வாகும் எம்எல்ஏக்கள் அனைவரும் சேர்ந்து முதலமைச்சரை தேர்ந்தெடுப்போம். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதற்கான உகந்த நேரம் தற்போது இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் பார்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்த அனுமதியில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். வருகின்ற 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடைமுறையினால் மக்காத பிளாஸ்டிக் தாள் , மக்காத பிளாஸ்டிக் தட்டு, மக்காத பிளாஸ்டிக் டீ கப், மக்காத தண்ணீர் கப் , தண்ணீர் பாக்கெட் […]
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 2019 ம் ஆண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர் சென்னையில் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளில் குவிந்த மக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இனிப்புகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடினர். சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்தும் சிறப்பு பிரார்த்தனை செய்தும் புத்தாண்டை வரவேற்றனர். அதேபோல நகரின் பல்வேறு முக்கிய இடங்களிலும் திரண்ட இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். கோவையிலும் […]
மானிய சமையல் காஸ் சிலிண்டரின் விலையில் 5 ரூபாய் 91 காசுகளை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. தற்போது, மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு 5 ரூபாய் 91 காசுகள் குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் அறிவித்துள்ளது. இது தவிர மானியம் இல்லாத சிலிண்டரின் விலையில் 120 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. […]
விராலிமலையில் ஜனவரி 20-ஆம் தேதி 1800 காளைகள் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,தமிழகத்தில் இந்தாண்டும் பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும், சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.புதுக்கோட்டை விராலிமலையில் ஜனவரி 20-ஆம் தேதி 1800 காளைகள் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் .புத்தாண்டு கொண்டாட்ட முன்னெச்சரிக்கையாக 936 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ்கள், 41 இருசக்கர வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தது தொடர்பாக சட்டவிதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், அமெரிக்காவை சேர்ந்த நபர் தூத்துக்குடியில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தது தொடர்பாக சட்டவிதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் யாருடைய அழைப்பின் பேரில், எந்தெந்த இடங்களுக்கு சென்றார் என விசாரணை நடைபெற்று வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுங்கயில், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்ற அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் .அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. வெளிநாட்டுக்கு கொண்டு சென்று ஆஞ்சியோ செய்திருந்தால் சில அரசியல் அழுத்தங்களிலிருந்து விடுபட்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்றிருக்க முடியுமோ என்னவோ?…திருவாரூரில் மக்கள் […]
வங்கி கடனை செலுத்தாதவர்கள் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க கோர்ட் யோசனை வழங்கி உள்ளது. போலிபாஸ்போர்டில் வெளிநாடு சென்ற அங்கன்வாடி பணியாளர் பாணீக்கத்தை எதிர்த்த வழக்கில், கடன் பெற்றுவிட்டு வெளிநாடு தத்துவத்தை தடுக்க பாஸ்போர்ட்டை வங்கியில் ஒப்படைக்க சட்ட திருத்தம் தேவை என்றும், கடனை திருப்பி செலுத்தாவிட்டால் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
ஸ்டாலின் கிராம சபை கூட்டம் தோல்வி அடையும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை .ஸ்டாலின் ஏற்கனவே மக்களை தேடிச் சென்ற நிகழ்ச்சிகள் தோல்வி அடைந்ததைப் போல, கிராம சபை கூட்டமும் தோல்வி அடையும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுக்குள் பிளவு எதுவும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு வந்தது.மருத்துவமனையில் அமைச்சர்கள் யாரும் தங்கவில்லை, சசிகலா குடும்பத்தினர் மட்டுமே தங்கியிருந்தனர் .மருத்துவமனையில் அமைச்சர்கள் யாரும் தங்கவில்லை, சசிகலா குடும்பத்தினர் மட்டுமே தங்கியிருந்தனர் . அமைச்சர்களுக்குள் பிளவு எதுவும் இல்லை, ஏற்படுத்தவும் முடியாது.தமிழகத்திற்கு வந்த முதலீடுகள் திரும்ப பெறப்படவில்லை, இது குறித்து விளக்கத் தயார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ப்ளஸ் 2 படிப்பில் முக்கியப் பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ப்ளஸ் 2 படிப்பில் முக்கியப் பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்துடன் ஒரே புத்தகமாக வழங்க பள்ளி கல்வித்துறை […]