இன்று முதல் (ஜனவரி 1ஆம் தேதி) 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தினை தடை விதிக்க தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் வருகின்ற 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க அரசு முடிவு செய்தது. அரசின் இந்த நடைமுறையினால் மக்காத பிளாஸ்டிக் தாள் , மக்காத பிளாஸ்டிக் தட்டு, மக்காத பிளாஸ்டிக் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 2 ஆம் தேதி) கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 2ஆம் தேதி) காலை 10 மணிக்கு கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்படும். இந்த கூட்டத்தொடரில், மேகேதாட்டு விவகாரங்கள், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பிரச்சினைகள் […]
தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 1-ம் தேதி )முதல் வாகன வரி செலுத்துதல், பெயர் மாற்றம் செய்தல், வாகனம் புதுபித்தல் போன்ற வாகனம் தொடர்பான அனைத்து பணிகளும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மனுதாரர்கள் நேரடியாக இணையதளம் மூலம் விண்ணப்பித்து பணிகளுக்கான கட்டணத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இந்த சேவையை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள், அரசு பேருந்து ஓட்டுனர்கள், மினி பேருந்து உரிமையாளர்கள், உள்ளிட்டோருக்கு கணினி மூலம் விண்ணப்பம் செய்து பணம் கட்டுதல் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் […]
பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதி , மதரீதியிலான பிரச்சனைகள் தலைதூக்கும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதி , மதரீதியிலான பிரச்சனைகள் தலைதூக்கும்.சிறிய நடுத்தர தொழில்கள் நசுக்கப்படும், நாடு பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும். எனவே மத்தியில் ஆளும் பிஜேபி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அவர்களுக்குக் காவடி தூக்கும் அதிமுக ஆட்சியையும் தூக்கி எறியப்பட வேண்டும் அப்போதுதான் தந்தை பெரியாரின், தலைவர் […]
ஜனவரி 3ம் தேதிக்குள் திருவாரூர் இடைத்ததேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்ப படிவத்தை ஒப்படைக்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை 3ம் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் .அன்பழகன் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். வேட்பாளருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 25 ஆயிரம் என்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு […]
முதலமைச்சர், துணை முதலமைச்சரின் வியூகம், திருவாரூரில் அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், முதலமைச்சர், துணை முதலமைச்சரின் வியூகம், திருவாரூரில் அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என்று […]
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ஆங்கிலேய புத்தாண்டு புதிய அரசியல் சுதந்திரத்திற்கான களமாகவும் தமிழர்களின் எழுச்சியாகவும் இருக்க வாழ்த்துகள். மக்கள் நீதி மய்யம் 2018ல் மாற்றத்திற்கான விதையினை விதைத்திருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது என்பது உண்மை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை.மருத்துவமனையில் ரூ 1 கோடிக்கும் மேல் உணவு சாப்பிட்டது யார்? ..மருத்துவமனையை உல்லாசவிடுதியாக்கி தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் .சசிகலா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார். ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று […]
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். ஏற்கனவே அறிவித்த […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், பதவி ஏற்ற உடனேயே அவர் செய்துள்ள நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக பதிவாளர் திடீரென்று ராஜினாமா செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணனை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறப் போவது அதிமுக மட்டும்தான் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறப் போவது அதிமுக மட்டும்தான் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார். கஜா புயல் பாதித்த பகுதிகளில் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க […]
சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு வந்தது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை.மருத்துவமனையில் ரூ 1 கோடிக்கும் மேல் உணவு சாப்பிட்டது யார்? ..மருத்துவமனையை உல்லாசவிடுதியாக்கி தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் .சசிகலா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி […]
பிளாஸ்டிக் பை தடையை நிறைவேற்றுவது பற்றி முதல்வருடன் அதிகாரிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. வருகின்ற 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடைமுறையினால் மக்காத பிளாஸ்டிக் தாள் , மக்காத பிளாஸ்டிக் தட்டு, மக்காத பிளாஸ்டிக் டீ கப், மக்காத தண்ணீர் கப் , தண்ணீர் பாக்கெட் , பிளாஸ்டிக் உறிஞ்சு […]
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்னாள் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஜனவரி 2 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை […]
மதுபானக் கடைகளில் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடைமுறையினால் மக்காத பிளாஸ்டிக் தாள் , மக்காத பிளாஸ்டிக் தட்டு, மக்காத பிளாஸ்டிக் டீ கப், மக்காத தண்ணீர் கப் , தண்ணீர் பாக்கெட் , […]
இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 24% குறைந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை பதிவான அளவு 34 செ.மீ. இது வழக்கத்தைவிட 24 சதவிகிதம் குறைந்துள்ளது .வானிலை நிகழ்வுகள் சாதகமாக இல்லாததே பருவமழை குறைவுக்கு காரணம் .எல் நினோ உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தள்ளிப்போனதால் மழை இல்லை சென்னையில் இயல்பைவிட 55% மழை குறைவாக பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் […]
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஆறுமுகசாமி விசாரணை […]
குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. 2017 அக்டோபர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . 85 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வாகியுள்ள 176 பேர்களின் விவரங்கள் http://www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.