சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு ...!அமைச்சர் ஜெயக்குமார் பகீர் தகவல்

சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு வந்தது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு வந்தது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக  அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை.மருத்துவமனையில் ரூ 1 கோடிக்கும் மேல் உணவு சாப்பிட்டது யார்? ..மருத்துவமனையை உல்லாசவிடுதியாக்கி தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் .சசிகலா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்.ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதை தடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து அரசு, சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

unknown node

தற்போது  அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு வந்தது.மருத்துவமனையில் அமைச்சர்கள் யாரும் தங்கவில்லை, சசிகலா குடும்பத்தினர் மட்டுமே தங்கியிருந்தனர்  என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.