27-ஆம் தேதிக்கு முன்னரே பிரதமர் நரேந்திர மோடி  தமிழகம் வர வாய்ப்பு உள்ளது ...!தமிழக பாஜக தலைவர் தமிழிசை

பிரதமர் நரேந்திர மோடி  தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி  தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், ஜனவரி  27-ஆம் தேதிக்கு முன்னரே பிரதமர் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது. திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

இடைத்தேர்தலை விட நாடாளுமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்துகிறோம்.ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்றிருந்தால் சுதந்திரமான, முழுமையான சிகிச்சை அளித்திருக்க முடியும் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.