அ.ம.மு.க திருவாரூர் வேட்பாளர் ஜனவரி  4-ஆம் தேதி  அறிவிக்கப்படுவார் ...!தினகரன்

பொங்கல் பரிசாக தமிழக அரசு கொடுக்கும் ரூ 1000 மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன்  தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசாக தமிழக அரசு கொடுக்கும் ரூ 1000 மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன்  தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பாக  அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன்  கூறுகையில், சட்டப்பேரவையில் சம்பிரதாயத்திற்காக ஆளுநர் உரை வாசிக்கப்பட்டுள்ளது . தமிழக அமைச்சர்கள் மக்களுக்காக டெல்லி செல்லவில்லை.அமைச்சர்கள் அடிக்கடி டெல்லி செல்வதன் மர்மம் என்ன…தமிழக அரசு என்னென்ன நலத்திட்டங்களை செய்தது என தெரியவில்லை.பொங்கல் பரிசாக தமிழக அரசு கொடுக்கும் ரூ 1000 மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது.அ.ம.மு.க திருவாரூர் வேட்பாளர் ஜனவரி  4-ஆம் தேதி  அறிவிக்கப்படுவார் .

ஆட்சி சிறப்பாக நடப்பதாக ஆளுநர் உரையாற்றி இருப்பது உண்மைக்கு மாறாக உள்ளது. பல பிரச்சனைகளில் மாநில உரிமை பாதிப்பு என்று ஆளுநரே கூறியிருக்கிறார் .தேர்தலுக்காக ஜெயலலிதாவின் பெயரை அதிமுகவினர் பயன்படுத்துகின்றனர்.ஒபிஎஸ் தான் ஜெயலலிதா சிகிச்சையில் தவறு செய்துள்ளார் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன்  தெரிவித்துள்ளார்.