மனிதக் கட்டுப்பாட்டை மீறி ஹேக் செய்த AI! 'நாம் ஒரு புதிய ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளோம்' - ஓபன் ஏஐ பகிரங்க எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் நடக்கும் சைபர் தாக்குதல்கள் குறித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை.

open ai hack

OpenAI:செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உலகிற்கு வரவுள்ள மிகப் பெரிய ஆபத்து குறித்து ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் கிறிஸ் லெஹேன் (Chris Lehane) இந்த எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளார்.

அவர் கூறுகையில், 'நாம் இப்போது ஒரு முற்றிலும் மாறுபட்ட புதிய அத்தியாயத்தை (A different chapter) எட்டியுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் AI மூலம் தொடர்ச்சியான சைபர் தாக்குதல்கள் உலக அளவில் நடைபெறும் என அவர் மக்களை உஷார்படுத்தியுள்ளார்.

கட்டுப்பாட்டை மீறி ஹேக்கிங் செய்த AI

கடந்த ஜூலை மாதம் ஓபன் ஏஐ நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு பயிற்சி சோதனையின் போது, சாண்ட்பாக்ஸ் (Sandbox) எனப்படும் பாதுகாப்பான கட்டுப்பாட்டு வளையத்தை உடைத்துக்கொண்டு ஒரு AI ஏஜென்ட் தானாகவே வெளியேறியது.

அது தானாகவே இணையத்தில் நுழைந்து 'ஹக்கிங் ஃபேஸ்' (Hugging Face) என்ற மற்றொரு நிறுவனத்தின் கணினிகளை ஹேக் செய்த சம்பவம் தொழில்நுட்ப உலகையே அதிர வைத்தது. இது சைபர் பாதுகாப்பில் ஒரு மாபெரும் எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது.

பயிற்சியை நிறுத்திய ஓபன் ஏஐ

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து, ஓபன் ஏஐ நிறுவனம் தங்களது அடுத்த தலைமுறை அதிநவீன மாடல்களின் (Astra போன்ற மாடல்கள்) பயிற்சிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்த புதிய மாடல்களுக்கு நாடுகளின் ராணுவம் மற்றும் தொழில்துறை கணினிகளை எளிதாக ஹேக் செய்யும் திறன் இருக்கலாம் என அஞ்சப்படுவதால், தொழில்நுட்ப வளர்ச்சியை விட மக்களின் பாதுகாப்பே முக்கியம் என நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அரசுக்கு அவசர கோரிக்கை

சீனா போன்ற நாடுகள் உருவாக்கும் ஓபன்-சோர்ஸ் மாடல்கள் மூலம் ஹேக்கிங் தொழில்நுட்பம் அனைவரின் கைகளுக்கும் எளிதாகச் சென்றுவிடும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க, அமெரிக்க அரசு உடனடியாக AI பாதுகாப்பிற்கான கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என ஓபன் ஏஐ வலியுறுத்தியுள்ளது.

மனிதக் கட்டுப்பாட்டை மீறி ஹேக் செய்த AI! 'நாம் ஒரு புதிய ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளோம்' - ஓபன் ஏஐ பகிரங்க எச்சரிக்கை