WhatsAppStatus [File Image]
தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா அதன் வாட்ஸ்அப் பயன்பாட்டில் தனது பயனர்களுக்காக பல புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவ்வாறு அறிமுகமாகும் அப்டேட்டுகள் அதன் பிற பயன்பாடுகளான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை ஒன்றாக இணைக்கும் நோக்கிலும் இருக்கும்.
அந்த வகையில் கடந்த மே 1ம் தேதி பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பில் பதிவிடும் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் ஷேர் செய்யக்கூடிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தினால் நீங்கள் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தவுடன் அதே ஸ்டேட்டஸை உங்கள் பேஸ்புக் ஸ்டோரிலும் ஷேர் செய்து கொள்ளலாம்.
ஒரு முறை உங்கள் பேஸ்புக் கணக்கை இணைத்து விட்டீர்கள் என்றால் நீங்கள் ஒவ்வொரு முறை ஸ்டேட்டஸ் வைக்கும் பொழுது தானாகவே பேஸ்புக் ஸ்டோரில் பதிவாகிவிடும். இந்த அம்சத்தை இன்னும் மேம்படுத்தும் நோக்கிலும் மெட்டா அதன் பயன்பாடுகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்திலும் இப்போது ஒரு அம்சத்தை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் ஷேர் செய்வது போலவே இன்ஸ்டாகிராமிலும் ஸ்டேட்டஸ் அப்டேட்களை ஷேர் செய்வதற்கான அம்சத்தை வாட்ஸ்அப் கொண்டு வர உள்ளது. இதனால் வாட்ஸ்அப்பில் பதிவிடும் ஸ்டேட்டஸ், இனி அப்படியே இன்ஸ்டாகிராம் ஸ்டோரிலும் காட்டப்படும்.
இந்த அம்சம் பயனர்கள் ஸ்டேட்டஸ் மற்றும் ஸ்டோரிகளை பதிவிடுவதற்கான நேரத்தை வெகுவாக குறைக்கிறது. தற்பொழுது இந்த அம்சம் ஆண்ட்ராய்டின் குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த அம்சத்தை 2.23.25.20 என்கிற வாட்ஸ்அப் பீட்டா வெர்சனை ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
இப்பொழுது ஸ்டேட்டஸை எவ்வாறு இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஷேர் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…