குறைந்த விலையில் 8000mAh பிரம்மாண்ட பேட்டரி! மொபைல் மார்க்கெட்டை மிரட்ட வரும் புதிய ரியல்மி!

நீண்ட நேர மொபைல் பயன்பாட்டை விரும்பும் பயனர்களுக்காக இந்த ஸ்மார்ட்போனில் 8000mAh திறன் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரியும், அதனுடன் 45W அதிவேக சார்ஜிங் வசதியும் வழங்கப்பட உள்ளது.

Hero Image

டெல்லி : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப்பெரிய பேட்டரி திறன் கொண்ட புதிய மொபைலை அறிமுகப்படுத்த ரியல்மி நிறுவனம் தயாராகியுள்ளது. ரியல்மி P4R என்ற புதிய ஸ்மார்ட்போன் வரும் ஜூன் 10ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட நேர பேட்டரி பயன்பாட்டை விரும்பும் பயனர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 8000mAh திறன் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 45W அதிவேக சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெற உள்ளது.

பிராசசர் என்ன?

ரியல்மி P4R ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 பிராசசர் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றாட பயன்பாடு, சமூக வலைதளங்கள், வீடியோ பார்வை மற்றும் விளையாட்டுகளுக்கான சிறப்பான செயல்திறனை இந்த பிராசசர் வழங்கும்.

50 மெகாபிக்சல் கேமரா : புகைப்பட ஆர்வலர்களை கவரும் வகையில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா வழங்கப்பட உள்ளது. இதனுடன் செயற்கை நுண்ணறிவு ஆதரவு கொண்ட பல்வேறு கேமரா அம்சங்களும் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல ஏஐ அம்சங்கள் : புதிய தலைமுறை ஏஐ தொழில்நுட்பங்களுடன் இந்த மொபைல் வரவுள்ளது. புகைப்பட மேம்பாடு, குரல் உதவியாளர், தானியங்கி படத் திருத்தம் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

விலை எவ்வளவு?

ரியல்மி P4R ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நடுத்தர விலை பிரிவில் அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இது நல்ல தேர்வாக அமையும்.

கவனம் ஈர்த்த ரியல்மி P4 பவர்

இதற்கிடையில், ரியல்மி நிறுவனம் பிலிப்பைன்ஸில் 10,000mAh பேட்டரி கொண்ட ரியல்மி P4 பவர் மாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 80W அதிவேக சார்ஜிங், 144Hz புதுப்பிப்பு வீதம் கொண்ட AMOLED திரை, 50 மெகாபிக்சல் சோனி IMX882 கேமரா, டைமென்சிட்டி 7400 பிராசசர் உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ரியல்மி P4R மாடல், பெரிய பேட்டரி, வேகமான சார்ஜிங் மற்றும் குறைந்த விலை ஆகியவற்றின் மூலம் சந்தையில் அதிக கவனம் பெறும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

குறைந்த விலையில் 8000mAh பிரம்மாண்ட பேட்டரி! மொபைல் மார்க்கெட்டை மிரட்ட வரும் புதிய ரியல்மி!