ரஷ்ய நடுக்கடலில் படகு மூழ்கி 17 பேர் மாயம்.!

ரஷ்யா: பேரண்ட்ஸ் கடலில் ஒரு ரஷ்ய மீன்பிடி படகு மூழ்கியதில் 17 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் இருவர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.
ஒனேகா என்ற மீன்பிடி படகு 19 நபர்களுடன் நோவோயா ஜெம்ல்யா தீவுக்கூட்டத்தின் அருகே மூழ்கியது. கப்பலில் அதிகப்படியான பனிக்கட்டிகள் உருவாகியதே இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
தற்போது, காணாமல் போனவர்களை தேடுதல் பணியில் தீவிரமாக மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025