சீனாவின் மத்திய பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவிலுள்ள ஹெனான் மாகாணத்தில் ஜீசெங் கவுண்டி எனும் பகுதியில் தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்கக்கூடிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு இன்று காலை தற்காப்பு கலை பயிற்சிக்காக 34 மாணவ மாணவிகள் வந்துள்ள நிலையில், இந்த பள்ளிக்கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் அங்கிருந்த பல குழந்தைகள் காணவில்லை எனவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் அதிகளவில் 7 முதல் 16 வயது உள்ள குழந்தைகள் பலர் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. மேலும் இந்த தீ விபத்தில் நான்கு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த பள்ளியில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரிப்பதற்காக பள்ளியில் மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…