சீனாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது, இதனால் தற்போது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றும் இன்றும் இந்நாட்டின் மத்திய மாகாணங்களில் உள்ள இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் ஹூபெய் நகரில் அளவுக்கு அதிகமாக 503 மி.மீ. மழை பெய்ததால் நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் ஆபத்தான பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 8 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த கனமழையால் தற்போது 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 பேர் காணாமல் போய் உள்ளனர். அதேபோல் சீனாவில் மழை இன்னும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மழை வெள்ளத்தால் இதுவரை கடந்த ஒரு மாதத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…