ஆப்கானிஸ்தானில் வெடி விபத்து ! 5 போலீசார்உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து போலீசார் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் “குனார் மாகாணத்தில் உள்ள சாப்பா தாரா மாவட்டத்தில் நேற்று இரவு வெடித்ததில் ஐந்து போலீசார் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை, எந்த பயங்கரவாதக் குழுவும் குண்டுவெடிப்புக்கான பொறுப்பை ஏற்கவில்லை.இன்று நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத்தில் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர்.காலையில் வெடிப்பு நடந்ததாக நங்கர்ஹார் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025