இங்கிலாந்து பிரதமரின் விருதை பெற்ற 6 வயது இந்திய வம்சாவளி சிறுமி ..!

6 வயது இந்திய வம்சாவளி சிறுமி பருவநிலை மாற்ற செயல்பாட்டிற்காக இங்கிலாந்து பிரதமரின் விருதை பெற்றார்.
ஆறு வயது இந்திய வம்சாவளி சிறுமி அலிஷா காதியா, பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்திற்காக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் “பாயிண்ட்ஸ் ஆஃப் லைட்” விருதைப் பெற்றார். பிரிட்டிஷ் PM பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருதைப் பெறும் 1,755 வது நபராக அலிஷா ஆனார்.
அலீஷா காதியா புவி வெப்பமடைதல், காடழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் non-profit ‘Cool Earth’ என்ற என்ஜிஓ -வில் உறுப்பினராக உள்ளார். non-profit ‘Cool Earth’க்காக அலீஷா காதியா இதுவரை 3,000 பவுண்டுகளுக்கு மேல் திரட்டியுள்ளார். மத்திய இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹாம்ஷையரின் மேற்கு பிரிட்ஜ்போர்டைச் சேர்ந்த அலிஷா தனது பள்ளியில் காலநிலை மாற்ற கிளப்பையும் அமைத்துள்ளார்.
அதில், குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் காடு வளர்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு போன்ற செயல்பாடுகளுடன் சுற்றுச்சூழலைப் பற்றி அக்கறை கொள்ள மற்றவர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும்,80 கிமீ சைக்கிள் பயணம் செய்து பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சிறப்பு என்னவென்றால், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநருமான டேவிட் அட்டன் பாரோ அதை ஆதரித்தார்.
அலிஷா கூறுகையில் “இந்த விருது குறித்து நான் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். எனக்கு இந்த விருது கிடைக்கும் என்று நான் நினைத்ததில்லை. என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025