ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,300 பேரை காணவில்லை.
மேற்கு ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ஜெர்மனி மற்றும் இதன் அருகில் உள்ள பெல்ஜியம், நெதர்லாந்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் பல குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. மேலும் பல வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனியில் 59 பேர், பெல்ஜியத்தில் 6 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் அதிகப்படியான சிக்கலை சந்தித்துள்ள ரைன்ட்லேண்ட் பலட்டினேட் மாகாணத்தில் கிட்டத்தட்ட 1,300 மக்கள் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனால் இவர்களை தேடும் பணியில் தற்போது ஜெர்மனியின் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…