பஞ்சாபில் ஆரம்ப தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 8393 காலிப்பணியிடங்கள்!

Vacancies for Punjab Primary School Teachers have been announced. Notice that there are 8393 vacancies. Application details are given below.

பஞ்சாபில் ஆரம்ப தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8393 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு. விண்ணப்பிக்கும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் ஆரம்ப தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8393 காலி பணியிடங்களில் ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் educationrecruitmentboard.com என்ற லிங்கில் சென்று பார்வையிடலாம். அதன்படி இந்த ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய விதிமுறை பின்வருமாறு

educationrecruitmentboard.com அதிகாரபூர்வ வலை தளத்தை பார்வையிட வேண்டும்.

அதன் முகப்பு பக்கத்தில் Latest recruitment -ஐ கிளிக் செய்ய வேண்டும்.

ஒரு புதிய பக்கம் திரையில் தோன்றும். ஆரம்ப முதன்மை ஆசியர்களுக்கான ஆள்சேர்ப்பு 2020 படிக்கும் இணைப்பு கிளிக் செய்யவேண்டும்.

பின்  ஒரு புதிய பக்கம் திரையில் தோன்றும்.

பதிவு செய்ய விரும்புவர்கள் கீழ்காணும் விண்ணப்ப படிவங்களில் செயல் முறையின் படி பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1000  விண்ணப்ப கட்டணமும், எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிப்பவர்கள் நர்சரி ஆசிரியர் கல்வி திட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு வருடம் டிப்ளமோ படிப்பு அல்லது அதற்கு சமமானதாக கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.