இயக்குனர் சற்குணம்- நடிகர் அதர்வா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. இந்த படத்தை தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார். மேலும், நடிகர் அதர்வா நடிப்பில் தற்போது குருதி ஆட்டம் மற்றும் தள்ளி போகாதே ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் அதர்வா அடுத்ததாக தமிழ் சினிமாவில், களவாணி, நைய்யாண்டி, சண்டிவீரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவருடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
படத்திற்கான பூஜை கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது இயக்குனர் சற்குணம்- நடிகர் அதர்வா கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…