ஐஸ்வர்யா ராஜேஷ் பட இயக்குநருடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்.!

ரைசா வில்சன் அடுத்ததாக கார்த்திக் ராஜூ இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 மூலம் பிரபலமானவர் தான் ரைசா. அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது. அதன் பின்னர் அதே பிக்பாஸ் 1 மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிறேமா காதல் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
தற்போதும், அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, FIR, ஹஷ்டாக் லவ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தினேஷ் நடித்த ‘திருடன் போலீஸ்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கார்த்திக் ராஜூ இயக்கும் படத்தில் ரைசா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தை ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஆப்பிள் ஜூஸ் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளது. தற்போது கார்த்திக் ராஜூ ரெஜினா கெசன்ட்ரா நடிக்கும் ‘சூர்ப்பனகை’ என்ற படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது. விரைவில் ரைசாவின் அடுத்த படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025