அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் ஹெச்.வினோத் இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இன்னும் 61-வது படத்திற்கான படப்பிடிப்பே தொடங்கவில்லை அதற்குள் அஜித்தின் 62-வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகி விட்டது. அதன்படி, அஜித்தின் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு தற்காலிகமாக AK62 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ” எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் மதிப்புமிக்க AK62 க்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற இந்த சிறந்த வாய்ப்புக்கு நன்றி அஜித் சார் வார்த்தைகளால் மகிழ்ச்சியை விளக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…