தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான போக்குரி ராமராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது. சில இடங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த கொரோனாவால் பல திரையுலக பிரபலங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான போக்குரி ராமராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது மரணம் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது பல பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…