ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பான் நாட்டில் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்சு மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளது. இது ஜப்பானிய மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி பற்றிய அவதூறு.! மாலத்தீவு அதிபர் பதவி விலக அந்நாட்டு முக்கிய தலைவர் வலியுறுத்தல்.!
ஜப்பானில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவானது. அதுவும், ஜப்பானின் மேற்கு பகுதியில் ஒரே நாளில் மட்டும் 155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கத்தால் தங்களை வீடுகளை விட்டு பலர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அந்த நேரத்திலேயே, ஜப்பானில் மீண்டும் இந்தவாரம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் கூறியிருந்த நிலையில், தற்போது இன்று மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்சு மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!
July 3, 2025