அமெரிக்காவில் சுபரீம் கோர்ட் உள்ளது. இதற்கு அடுத்த நிலையில் கொலம்பியா சர்கியூட் அப்பீல் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழரான ஸ்ரீ. சீனிவாசன் (52) என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரது தந்தை பத்பநாபன் சீனிவாசன்.
இவர் திருநெல்வேலி அருகில் உள்ள மேல திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்தார். தாயார் சரோஜா அதே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியையாக இருந்து உள்ளார்.
1960-களில் இவர்களது குடும்பம் அமெரிக்காவிற்கு குடியேறியது. ஸ்ரீ. சீனிவாசன் பிறந்தது சண்டிகார். பட்டம் படித்தது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் பின்னர் அங்கேயே சட்டப்பட்டமும் பெற்று தொடர்ந்து எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.
ஸ்ரீ. சீனிவாசன் அமெரிக்க அப்பீல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹார்வி வில்கின்சன்னிடம் குமாஸ்தாவாக இருந்தவர். பின்னர் 2011-ம் ஆண்டு முதல் முதன்மை துணை அட்டார்னி ஜெனரல் பதவி வகித்தார். இந்நிலையில் தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்க அப்பீல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…