சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அயலான் டீசர்…?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் டீசர் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் என்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் .இதில் அயலான் படத்தினை ‘இன்று நேற்று நாளை’ படத்தினை இயக்கிய ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங்,யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இஷா கோபிகர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து டி.முத்துராஜ் இசையமைக்கிறார் . பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் 2500 கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாக இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான டீசர் வருகின்ற 17 ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியீடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025