'ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது!' – 'பாலியல் குற்றங்கள்' குறித்து இயக்குனர் பாக்யராஜ் சர்ச்சை கருத்து!

Published by
மணிகண்டன்

பொள்ளாச்சி சம்பவம் குறித்து இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் அண்மையில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் சர்ச்சையான கருத்துக்களை அந்த விழாவில் தெரிவித்தார். தற்போது அவரது பேச்சு இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
எம்.பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ள  ‘கருத்துக்களை பதிவு செய்’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர் பாக்யராஜ் அரசியல் பிரமுகர் விஜயதாரணி, எஸ்.வி.சேகர், மீராமிதுன் என பலர் கலந்து கொண்டனர்.
அவ்விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் பல சர்ச்சையான கருத்தை முன்வைத்தார். அவர் பேசும்போது, ‘அனைத்து பெரிய திரையரங்குகளிலும் சிறிய திரைப்படமும் ஓடும்படி அரசு ஒரு சட்டம் இயற்ற வேண்டும். என கேட்டுக்கொண்டார். மேலும், இன்று போய் நாளை வா, கைதியின் டைரி என இரு படங்களையும் ஒரே இரவில் நான் எழுதி முடித்தேன். எனவும், தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை அந்த ஆண்கள் பயன்படுத்தி கொண்டனர். எனவும், இதற்கு ஆண்கள் மட்டும் பொறுப்பல்ல. அந்த பெண்களிடமும் தவறு உள்ளது எனவும் பேசினார்.
‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’ என்றும் தெரிவித்தார். பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆண் தவறான நடத்தையில் இருந்தாலும் தான் கட்டிய முதல் மனைவிக்கு குறை வைப்பதில்லை எனவும், ஆனால், ஒரு பெண் நடத்தை சரியில்லாமல் போனால் தன் கணவனை கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுகிறாள் எனவும் சர்ச்சையான கருத்தை தெரிவித்தார்.
இயக்குனர், நடிகர் கே.பாக்யராஜ் இந்த சர்ச்சை கருத்துக்கள் தற்போது இணையத்தில் பேசும் பொருள் ஆகி வருகின்றன.

Published by
மணிகண்டன்

Recent Posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

1 hour ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

2 hours ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

5 hours ago