நயன்தாரா படத்தில் கதாநாயகனாகும் பிக் பாஸ் கவின்….!

Default Image

விக்னேஷ் சிவன்- நயன்தாரா தயாரிக்கும் படத்தில் பிக் பாஸ் புகழ் கவின் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்ற சீரியல் நடிகர் தான் கவின். பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பதாகவே இவர் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து கவின் லிஃப்ட் எனும் திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

இந்த திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தை அடுத்து கவின் ஒரு இணையத் தொடர் ஒன்றிலும் நடித்து வருவதாகவும், அதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போதும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாராக கூடிய படமொன்றில் நடிக்க கவின் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். நயன்தாரா தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க கவின் ஒப்பந்தமாகி உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Mr. Subramanian
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings