nixen bigg boss [File Image]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், எந்த போட்டியாளர் அதிகம் வாக்குகளை பெற்று போட்டியில் வெற்றிபெற்று வெற்றியாளராக ஆக போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருந்தாலும் வாரம் வாரம் எலிமினேஷன் தவறாமல் நடந்துகொண்டு ஒரு ஒரு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றார்கள்.
அந்த வகையில், கடந்த வாரம் பலருடைய பேவரைட் போட்டியாளராக இருக்கும் நிக்சன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே வீட்டிற்குள் இருந்த இவர் கடந்த வாரம் குறைவான மக்கள் வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.
பல முறை சில சர்ச்சைகளில் நிக்சன் சிக்கி இருந்தாலும் அவருக்கு என்று தனிரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றே சொல்லவேண்டும். எனவே, கடந்த வாரம் நிக்சன் வீட்டை விட்டு வெளியே சென்றாதல் அவர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியில் இருந்த நிக்சன் இதுவரை எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, நிக்சன் பிக் பாஸ் வீட்டிற்குள் கலந்துகொள்ள ஒரு நாளைக்கு சம்பளமாக 13,000 ரூபாய் கேட்டுள்ளாராம். அதன் அடிப்படையில், அவர் இதுவரை பிக் பாஸ் வீட்டிற்குள் 90-நாட்கள் இருந்துள்ளார். அதனை வைத்து பார்க்கையில் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த 90 நாட்களுக்கு சம்பளமாக 11,70,000 ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாடல் எழுதி பாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்ட நிக்சன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து இருக்கும் நிலையில், அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…